Google Chromeஇல் பிரைவசி பிரச்சனையா? இணையவாசிகளை பதற வைக்கும் தகவல்!

  • IndiaGlitz, [Friday,July 09 2021]

இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்கவே Chrome ஒரு சிறந்த பிரவுசராக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதன் வேகமும் ஒரு பெரிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் Chrome மற்றும் அதன் தாய் நிறுவனமான Google இரண்டிலுமே பிரைவசி இல்லை என்று சில நிறுவனங்கள் கடும் குற்றம் சாட்டி வருகின்றன.

இதற்கு கூகுள் நிறுவனம் தனது பிரவுசரில் உள்ள குக்கீ மென்பொருள் உருவாக்கத்தை 3 ஆம் தர நிறுவனங்களுக்கு சமீபத்தில் வழங்கி இருப்பதே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆதரவு கடந்த மார்ச் மாதம் முதல் வரும் 2023 ஆம் வரை தொடரும் எனவும் தகவல் கூறப்பட்டு உள்ளது.

குக்கீ- இணையத்தளத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் வரிவடிவ கோப்பு. இந்த குக்கீ ஒரு பயனாளி எதையெல்லாம் தேடினார் என்ற விவரங்களை சேமித்து வைத்து இருக்கும். பொதுவாக இந்த குக்கீ மென்பொருளை பிரவுசர் நிறுவனங்களே தனது பிரவுசர் செயலியில் ஏற்படுத்தி இருக்கும். இதன் மூலம் பயனாளிகளை அடையாளம் கண்டு அவருக்கு வேண்டிய சேவையை அந்த பிரவுசரால் எளிதாகக் கொடுக்க முடியும்.

இந்த குக்கீகளிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று தற்காலிகமானது. அதாவது பயனாளி இணைய சேவையைப் பயன்படுத்தும்போது மட்டும் இந்த குக்கீ அவரது தனிப்பட்ட விவரங்களைச் சேமித்து வைத்து இருக்கும். பின்பு அவற்றை அந்த பிரவுசர் மறந்துவிடும் வகையில் குக்கீ பிரவுசர் வடிவமைக்கப்பட்டு இருக்கும். மற்றொன்று நிரந்தரமான குக்கீ. இதில் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்து வைத்து அவற்றை வாழ்நாள் முழுக்கவே நினைவில் வைத்துக் கொள்ளும்.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது வர்த்தகக் காரணங்களுக்காக 3 ஆம் தர குக்கீகளுக்கு தனது பிரவுசரில் இடம்கொடுத்து இருக்கிறது. அதாவது குரோம் பிரவுசரில் இருக்கும் குக்கீகளை, தானே உருவாக்காமல் ஒரு 3 ஆம் தர வெளிநிறுவனம் உருவாக்கும். இப்படி உருவாக்கும்போது அது தனிப்பட்ட பாதுகாப்பு இல்லாமல் போகிறது என்றும் இந்த வசதியை வைத்து விளம்பர நிறுவனங்கள் பயனாளிகளின் பிரைவசியை கெடுப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றன.

அதாவது குரோம் தானாக உருவாக்கி இருக்கும் குக்கீகள் மூலம் பயனாளிகளுக்கு எந்த தொந்தரவும் இருக்க போவதில்லை. மீறிப்போனால் வாழ்நாள் முழுக்க நாம் எதை தேடினோம், எந்த வகையான இணைய சேவையைப் பயன்படுத்துகிறோம் என்பதை மட்டுமே குரோம் அறிந்து வைத்து இருக்க முடியும்.

ஆனால் குரோமில் இருக்கும் குக்கீகளை வேறு ஒரு தனியார் நிறுவனம் உருவாக்கும்போது, அந்த வசதியை வைத்து ஒரு பயனாளி எதையெல்லாம் பார்க்கிறார்? எந்த பொருளை ஆன்லைனில் வாங்குகிறார்? அவரின் தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பு என்ன என்பது வரைக்கும் கண்டுபிடிக்க முடியும் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இப்படி சேகரிக்கப்படும் தனிப்பட்ட விவரங்கள் விளம்பரக் கம்பெனிகளுக்கு விற்கப்படலாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. இந்த அடிப்படையில்தான் கூகுள் மற்றும் குரோம் பிரவுசர் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கூகுள் நிறுவனத்தின் மீது இருந்த பாதுகாப்பு தன்மை 81% குறைந்து விட்டதாகவும் அந்நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஃபயர்பாக்ஸ் போன்ற பிரவுசர் நிறுவனங்கள் ஏற்கனவே குக்கீ நீக்க வசதியை அறிமுகப்படுத்தி விட்டது. ஆனால் ஃபேஸ்புக் போன்ற ஒருசில செயலிகளில் இந்த குக்கீ நீக்க வசதிகளே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக “பிரேவ்“, “டக்டக்கோ“ போன்ற பிரவுசர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றன. பயனாளிகளின் சேவையை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்களும் இதுபோன்ற பிரவுசர் நிறுவனங்கள் கூகுளில் இருக்கும் ஓட்டையைக் கண்டுபிடித்து அதை பயனாளிகளுக்கு எடுத்துச் சொல்லி வருகின்றன.

இதனால் கூகுள் தனது குக்கீ செயல்பாடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது. ஆனால் வர்த்தகத்தின் மூலம் பணத்தை அறுவடை செய்ய முடிவு செய்து இருக்கும் கூகுள் நிறுவனத்தால் இதுமுடியுமா? என்பதே சந்தேகம். இதனால் குரோம் பிரவுசருக்கு பதிலாக FLoc என்னும் மற்றொரு மோசமான பிரவுசரை கூகுள் அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே பிரவுசரில் இருக்கும் குக்கீகளை பற்றி இணையவாசிகள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முடிந்த வரை குக்கீ நீக்க வசதிகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட விவரகங்களை அழித்துவிடுவது நல்லது என்றும் ஆலோசனை வழங்குகின்றனர்.

More News

கமல்ஹாசனின் 'விக்ரம்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 

புதிய அவதாரம் எடுத்த பிக்பாஸ்....! இதில் வெளியானத்திற்குப்பின் தான் டிவியில்....?

பல மொழிகளில் வெளிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது, முதன்முதலாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் கூறுகிறது.

அதிமுக-வின் அதிகார மமதைதான், கர்நாடக அரசின் ஆதிக்கத்திற்கு காரணம்...!தமிழகஅரசிற்கு சீமான் வேண்டுகோள்....!

தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணையை கர்நாடக அரசு கட்டியுள்ளது. அந்த அரசு மீது தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காமல் அமைதி காப்பது ஏன்...?

கமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பு தொடங்கிவிட்டதா? பரபரப்பு தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளிவந்து

தனுஷின் 'D43' படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகினாரா?

தனுஷ் நடித்துவரும் 'D43' என்ற திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது