close
Choose your channels

கமல்ஹாசனின் 'விக்ரம்' படப்பிடிப்பு தொடங்கிவிட்டதா? பரபரப்பு தகவல்!

Friday, July 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளிவந்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி குறித்த காட்சிகளின் டெஸ்ட் படப்பிடிப்பு நடந்துள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்பது மட்டுமின்றி விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்ட வதந்திக்கு இந்த தகவல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகிய நால்வரும் வில்லன்களாக நடிக்க உள்ளனர் என்பதால் வேற லெவலில் இந்த படம் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையில் க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் உருவாகும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.