close
Choose your channels

கமல்ஹாசனின் 'விக்ரம்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Friday, July 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ’விக்ரம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்றும், இதில் கமல்ஹாசன் மற்றும் விஜய்சேதுபதி கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜூலை இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், பகத் பாசில், நரேன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.