close
Choose your channels

கலாய்த்தவர்களின் வாயை ஒரே போஸ்ட் மூலம் பதிலடி கொடுத்த கிரேஸ் கருணாஸ்!

Thursday, March 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது உருவத்தை கேலி செய்து கலாய்த்தவர்களை ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் பதிலடி கொடுத்த கிரேஸ் கருணாஸ் பதிவு வைரலாகி வருகிறது.

நடிகர் கருணாஸ் மனைவியும் பாடகியுமான கிரேஸ் கருணாஸ் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக உள்ளார் என்பதும் அவரது சமையலை நடுவர்களே பாராட்டி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கிரேஸ் கருணாஸ் உடல் குண்டாக இருப்பதை சுட்டிகாட்டி ஏற்கனவே பல நிகழ்ச்சிகளில் அவரை காமெடியாக கலாய்த்து உள்ளார்கள் என்றும் ஆனால் அதையெல்லாம் சீரியஸாக எடுத்துச் செல்லாமல் சிரித்து கொண்டே கடந்து விடுவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இளமைக்காலத்தில் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் அதில் அவர் ஸ்லிம்மாக இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். தன்னுடைய உடல் குண்டாக இருப்பதை கலாய்த்த அத்தனை பேருக்கும் ஒரே ஒரு போஸ்ட் மூலம் கிரேஸ் கருணாஸ் பதிலடி கொடுத்துள்ளார் என பாசிட்டிவ் கமெண்டுகள் பதிவாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.