சமூக சேவைகளுக்காக ஜிவி பிரகாஷ் பெற்ற மதிப்பு மிகுந்த பட்டம்

  • IndiaGlitz, [Friday,May 18 2018]

நடிகர், இசையமைப்பாளர் என இரட்டை குதிரைகளில் சவாரி செய்து கொண்டு இரண்டிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்று வருபவர் ஜிவி பிரகாஷ். மேலும் நடிப்பு மட்டுமின்றி சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பவர் ஜிவி பிரகாஷ் என்பது தெரிந்ததே

ஜல்லிக்கட்டு, நெடுவாசல், ஹைட்ரோகார்பன் திட்டம், காவிரி பிரச்சனை உள்பட பல சமூக பிரச்சனைகளுக்கு தனது சமூக வலைத்தளத்திலும் நேரிலும் சென்று குரல் கொடுத்தவர். கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறியவர் என்பது தெரிந்ததே. மேலும் ஹார்வர்டு பல்கலையில் தமிழுக்கு இருக்கை அமைக்க கோலிவுட் திரையுலகில் இருந்து முதல் ஆளாக நிதியுதவி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜிவி பிரகாஷின் சமூக சேவையை பாராட்டி St.Andrews Theological University International என்ற பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இதுகுறித்து ஜிவி பிரகாஷின் மனைவியும் பாடகியுமான சைந்தவி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'ஜிவி பிரகாஷ் சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றது ஒட்டுமொத்த குடும்பத்தினர்களுக்கு பெருமையாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டோம் என்று கூறியுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஜிவி பிரகாஷூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

நயன்தாராவிடம் வெளிப்படையாக திருமண ஆசையை தெரிவித்த விக்னேஷ்சிவன்

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவது தெரிந்ததே. இருப்பினும் இருவரும் தங்கள் திருமண தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.

சல்மான்கான் படத்தில் முக்கிய வேடம்: கனவு நனவான மகிழ்ச்சியில் பிரபல நடிகை

சல்மான்கானுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு பாலிவுட் நடிகைகளுக்கும் இருப்பதுண்டு. அதிலும் தற்போதைய இளம் நடிகைகள் சல்மான்கானின் 90கள் படத்தை பார்த்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் படம் இயக்கும் டி.ராஜேந்தர், பிக்பாஸ் நடிகை தான் ஹீரோயின்

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறு அவதாரங்களில் புகழ் பெற்றவர்களில் மிகச்சிலரில் ஒருவர் டி.ராஜேந்தர்.

நிர்வாணமாக நடித்த தமிழ் நடிகைக்கு கொலை மிரட்டல்

நிர்வாணமாக நடித்த தமிழ் நடிகை ஒருவருக்கு மர்ம தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாகும் ஜாக்கிசான் பட நடிகை

கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் ஒருசில நடிகர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ்.