close
Choose your channels

சல்மான்கான் படத்தில் முக்கிய வேடம்: கனவு நனவான மகிழ்ச்சியில் பிரபல நடிகை

Thursday, May 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு பாலிவுட் நடிகைகளுக்கும் இருப்பதுண்டு. அதிலும் தற்போதைய இளம் நடிகைகள் சல்மான்கானின் 90கள் படத்தை பார்த்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சல்மான்கானுடன் ஒரே ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற சிறுவயது கனவு நடிகை திஷாபாட்டனிக்கு தற்போது நிறைவேறியுள்ளது. சமீபத்தில் 'பாஹி 2' என்ற வெற்றி படத்தில் நடித்த திஷா, தற்போது சல்மான்கான் நடிக்கவுள்ள அடுத்த படமான 'பாரத்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே ப்ரியங்கா சோப்ரா மற்றூம் சுனில் குரோவர் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்க்கஸ் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் திஷா சர்க்கஸ் கம்பெனியில் பணிபுரிபவராக நடிக்கவுள்ளாராம். ராஜ்கபூரின் 'மேரா நாம் ஜோக்கர்' படத்திற்கு பின்னர் பாலிவுட்டில் முழுஅளவில் சர்க்கஸ் கதையம்சம் குறித்த படம் இதுதான்

இந்த படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த கொரிய மொழி படத்தின் தழுவல் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு வரும் 2019ஆம் ஆண்டு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.