அசுரன் படத்தின் முக்கிய அப்டேட்டை அளித்த ஜிவி பிரகாஷ்

  • IndiaGlitz, [Thursday,July 11 2019]

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பிசியாக உள்ளார்

இந்த படத்தின் பாடல்கள் குறித்து ஏற்கனவே ஒருசில அப்டேட்டுக்களை தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் அடுத்த பாடல் கம்போஸிங் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார். இந்த வாரம் 'அசுரன்' படத்தின் அடுத்த பாடலை கம்போஸ் செய்யவிருப்பதாகவும், இந்த பாடலை ஏகாதேசி எழுதியுள்ளதாகவும், இந்த பாடலை பாடும் நபர் குறித்த ஆச்சரிய அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை தனுஷ், கென், டிஜே ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
 

More News

இயக்குனர் விஜய்யின் திருமண புகைப்படம் இதோ!

பிரபல இயக்குனர் விஜய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த பின்னர் சமீபத்தில் ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்தார்.

சாண்டியை வைத்து கும்மியடிக்கும் சக போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் வனிதா, மீராவையே வில்லியாக காண்பித்து வருவதால் பார்வையாளர்களுக்கு போரடித்துவிடும் என்பதால் பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் இன்று சற்று நிகழ்ச்சியை கொஞ்சம் வித்தியாசப்படுத்தியுள்ளனர்.

காஜல் அகர்வாலின் ஹாலிவுட் படத்தின் ஒன்லைன் கதை இதுதான்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் நடித்த 'பாரீஸ் பாரிஸ்' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில்

தல தோனிக்கு லதா மங்கேஷ்கர் வைத்த உருக்கமான வேண்டுகோள்!

நேற்றைய அரையிறுதி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக வெறித்தனமான தல தோனி விளையாடியபோதிலும் துரதிர்ஷ்டவசமான கடைசி நேரத்தில் ரன் அவுட் ஆனார்.

அமலாபாலுக்காக பி.சுசீலா பாடிய பக்தி பாடல்

அமலாபால் நடித்த 'ஆடை' படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் இந்த படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது