close
Choose your channels

காஜல் அகர்வாலின் ஹாலிவுட் படத்தின் ஒன்லைன் கதை இதுதான்!

Thursday, July 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் நடித்த 'பாரீஸ் பாரிஸ்' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திலும் அவர் நாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படம் தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கின்றது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையாக கொண்டது என்றும், ஒரு தம்பதியினருக்கு நிகழ்ந்த எதிர்பாராத விபத்தும், அந்த விபத்துக்கு பின் அவர்களுடைய வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்களும் என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன் கதை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் காஜல் அகர்வால் ஜோடியாக ஆங்கில பதிப்ப்பில் Jeffrey Gee Chin அவர்களும், தெலுங்கு பதிப்பில் மஞ்சுவிஷ்ணுவும், நடிக்கவுள்ளனர். இந்தி பதிப்பிற்கான நடிகரின் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் ஆங்கில பதிப்பிலும் இந்தி பதிப்பிலும் மேலும் பல ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.