close
Choose your channels

சாண்டியை வைத்து கும்மியடிக்கும் சக போட்டியாளர்கள்

Thursday, July 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் வனிதா, மீராவையே வில்லியாக காண்பித்து வருவதால் பார்வையாளர்களுக்கு போரடித்துவிடும் என்பதால் பிக்பாஸ் திரைக்கதை குழுவினர் இன்று சற்று நிகழ்ச்சியை கொஞ்சம் வித்தியாசப்படுத்தியுள்ளனர்.

இன்றைய முதல் புரமோவில் லாஸ்லியா கோபித்து கொண்டு கவினுடன் சண்டை போட்டது போன்றும், இரண்டாவது புரமோவில் இதுவரை பேசாத சரவணன் கோபப்படுவது போன்றும் காண்பித்த நிலையில் மூன்றாவது புரமோவில் 'வானத்தை போல பாடலை போல் சாண்டிக்கு சக போட்டியாளர்கள் ஒரு பாட்டை பாடி கும்மியடிக்கின்றனர்.

எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டை தான்
சண்டையில உடைஞ்சது எங்க சாண்டியோட மண்டதான்
என்ன நடந்தாலும் யார் போனாலும்
உயிர் கொடுப்பதும் நீங்கள் தான், உயிரை எடுப்பதும் நீங்கள் தான்

என்று பாட்டு பாடி ஜாலியாக உள்ளனர். சாண்டியை வழியனுப்பும் அன்று பாட வேண்டிய பாடலை இன்றே பாடிவிட்டார்களே என்ற கமெண்டுக்களும் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.