close
Choose your channels

கமல்ஹாசனை காலணியால் அடித்தவருக்கு பொன்னாடை போர்த்திய எச்.ராஜா

Saturday, May 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒரு பாஜக தொண்டர் காலணியை வீசினார். இதனையடுத்து அந்த நபரை அடித்து நொறுக்கிய மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் பின்னர் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனை நோக்கி காலணி வீசிய நபரை சமீபத்தில் சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை பாஜகவினர் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு கருத்தில் மாற்றுக்கருத்து இருந்தால் அதற்கு நாகரீகமாக மறுப்பு தெரிவிக்காமல், காலணியால் அடிப்பதும், காலணியால் அடித்தவருக்கு பாராட்டு தெரிவிப்பதும் அரசியல் நாகரீகமற்றது என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.