close
Choose your channels

'இது ஒரு அயோக்கியர்களின் ஆட்டம்': 'துணிவு' படம் குறித்து எச். வினோத்

Sunday, December 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் எச் வினோத் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த படம் குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார்.

இது ’மணி ஹெய்ஸ்ட்’ போன்ற ஒரு வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட படம் என சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், வங்கி செட் போட்டு எடுத்ததால் இதுபோன்ற வதந்தி பரவியுள்ளது என்றும், எனவே சமூக வலைதளங்களில் வரும் கதையை நம்ப ண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்னும் ஒரு சில நாட்களில் டீசர் மற்றும் டிரைலர் வெளியிட திட்டமிட்டு உள்ளோம் என்றும் அதை பார்த்து நீங்கள் இந்த கதையை யூகித்து விடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ’இது ஒரு அயோக்கியர்கள் ஆட்டம்’ என்று கூறிய வினோத், அஜித்துக்கு இந்த படத்தில் ஒரு மல்டிஷேட் கேரக்டர் என்றும் ஆனால் அதே நேரத்தில் ’மங்காத்தா’ கேரக்டருடன் இந்த கேரக்டரை ஒப்பிட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

மேலும் அஜித்திடம் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ அல்லது அரசியல் பற்றி எதுவும் நான் பேசவில்லை என்றும் வேறு யாரேனும் அது குறித்து பேச வந்தாலும் அவர் நாகரிகமாக அதை தவிர்த்து விடுவார் என்றும் எச். வினோத் கூறியுள்ளார்.

மேலும் முதலிடம் இரண்டாவது இடம் என்பது தற்போது திரையுலகில் யாரும் இல்லை என்றும் யார் வேண்டுமானாலும் முதலிடம் இரண்டாவது இடத்தில் வர வாய்ப்பு உள்ளது என்றும் கூறி உள்ளார்.

மேலும் துணிவு படத்தில் அஜித் ஜோடியாக மஞ்சுவாரியார் நடிக்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அஜித்தின் டீமில் உள்ள ஒருவராக மஞ்சுவாரியார் நடித்துள்ளார் என்றும் அவரது கேரக்டர் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். எச் வினோத்தின் இந்த பேட்டி மற்றும் ‘துணிவு’ படத்தின் புதிய ஸ்டில்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment