கேரளாவில் வரலாறு காணாத கனமழை: வெள்ளம், நிலச்சரிவால் 20 பேர் பலி

  • IndiaGlitz, [Thursday,August 09 2018]

கேரள மாநிலத்தில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் உள்ள 22 அணைகளும் கொள்ளளவை எட்டியதால் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாகவே தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் இறந்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. மேலும் இடுக்கி அணையின் முழு கொள்ளளவான 2,403 அடியை நெருங்க இன்னும் ஒருசில அடிகளே இருப்பதால் அந்த அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து தண்ணீர் 26 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் திறந்துவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளப்பெருக்கு காரணமாக கொச்சி சர்வதேச விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கனவெள்ளம் மற்றும் நிலச்சரிவை முன்னிட்டு கேரளாவில் உள்ள கொல்லம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது,.

More News

ஸ்ரீரெட்டி வெளியிட்ட ஆபாச வீடியோ: சமூக வலைத்தள பயனாளிகள் அதிர்ச்சி

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, டோலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

'விஸ்வரூபம் 2' வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில்

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2': 22 இடங்களில் கைவைத்த சென்சார்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.

கருணாநிதி நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக தலைவர்களும், தொண்டர்களும் திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதி மறைவு: ஆஸ்திரேலியாவில் இருந்து இசைஞானி இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு எதிர்பாராத ஒன்றாக இருந்ததால் பல முக்கிய பிரமுகர்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத  வகையில் வெளிநாட்டில் இருக்கின்றனர்.