close
Choose your channels

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2': 22 இடங்களில் கைவைத்த சென்சார்

Thursday, August 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. வெளிநாடுகளில் இன்று இரவே பிரிமியர் காட்சிகளும் திரையிடப்படவுள்ளன

இந்த நிலையில் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்றுள்ள விஸ்வரூபம் 2’ படத்தில் 22 இடங்களில் சென்சார் போர்டு கட், மியூட், காட்சி மாற்றம் செய்து கை வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எந்தெந்த காட்சிகளில் சென்சார் போர்டு குழுவினர் கட், மியூட், காட்சி மாற்றங்கள் செய்துள்ளனர் என்ற விரிவான விபரங்களும் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.