close
Choose your channels

மிருணாள் தாக்குர் செம்ம லிப்லாக்.. 'ஹாய் நான்னா' டீசர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

Sunday, October 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவான ‘ஹாய் நான்னா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியானதோடு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள ‘ஹாய் நான்னா’ என்ற திரைப்படத்தில் நானி மற்றும் மிருணாள் தாக்குர் இணைந்து நடித்துள்ளனர். ரொமான்ஸ் கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் டீசரை பார்க்கும்போதே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நானி, மிருணாள் தாக்குர், ஜெயராம் மற்றும் பேபி கியாரா நடித்த இந்த படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த டீசரில் மிருணாள் தாக்குர் லிப்லாக் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது

இந்த நிலையில் இந்த படம் டிசம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நானி ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.