close
Choose your channels

நிறைவடையும் நிலையில் 'D50' .. 'D51' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்.!

Sunday, October 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து இயக்கி வரும் 'D50’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் ’D51’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்து முடித்துள்ள ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனுஷ் தற்போது 'D50’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ’D51’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை அடுத்து தனுஷ், ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.