மழைகாலத்தில் சளி, தொண்டை வலியா? நோய்த்தீர்க்கும் வழிமுறை!

  • IndiaGlitz, [Friday,November 05 2021]

பருவமழை காலம் என்றாலே தொற்றுநோய்களுக்கு பஞ்சமே இருக்காது. இதற்கிடையில் சளி, தொண்டையில் வலி, கீறல், எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் நம்மை வாட்டி வதைக்கின்றன. இதுபோன்ற நோய்த் தொல்லைகளுக்கு கை மருத்துவத்தையே பலரும் விரும்புகிறோம்.

அந்த வகையில் தொண்டையில் கடுமையான வலி அல்லது ஊசிக் குத்துவது போன்ற வலி இருந்தால் அது பாக்டீரியா மற்றும் வைரஸ் பாதிப்புகளினால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

sore throat எனப்படும் இதுபோன்ற பாதிப்புகள் பெரும்பாலும் A Streptococcus எனும் கிருமிகளால் ஏற்படுகிறது என்றும் இது பெரிய நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே தொண்டை வலியை சாதாரணமாக கடந்துவிடாமல் அந்த நோயை முறிப்பதற்கான வழிமுறையை கையாள்வது நல்லது.

மஞ்சள்-மழைகாலங்களில் ஏற்படும் தொண்டை பிரச்சனைகளுக்கு மஞ்சள் ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. மேலும் சிறந்த ஆக்சிஜனேற்றி என்பதால் சிறிதளவு சூடு நிரீல் மஞ்சளை சேர்த்து கொப்பளிக்கலாம். இது நோய்த்தொற்று மற்றும் காயங்களை தொண்டையில் இருந்த உடனடியாக அகற்றிவிடும்.

தேன்- பாக்டீரியாக்களினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளை முறிப்பதில் தேனுக்கு சிறந்த சக்தி உண்டு. அந்த வகையில் எலுமிச்சை கலந்த வெந்நீரில் சிறிதளவு தேனை கலந்து குடிக்கும்போது நோய்த்தொற்று காணாமல் போகும்.

ஆப்பிள் வினிகர்- ஆப்பிள் சாற்றில் செய்யப்படும் வினிகர் அமிலத்தன்மையுடன் இருக்கும். இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் நோய்த்தொற்றை போக்குவதற்கும் அதேபோல குளிர்காலத்தில் தொண்டையில் ஏற்படும் உறுத்தல்களுக்கு சிறந்த மருந்தாகவும் இருக்கிறது.

பூண்டு – பூண்டு ஆன்டிபயாடிக்காக இருப்பதால் தொண்டை வலிக்கும் நோய்த்தொற்றுக்கும் சிறந்த நிவாரணியாக கருதப்படுகிறது. மேலும் பூஞ்சை தொற்றுகளால் ஏற்படும் நோய்களுக்கு ஆண்டி வைரஸாக பூண்டு இருக்கிறது. எனவே சுடு தண்ணீரில் பூண்டை சேர்த்து அருந்தலாம்.

உப்பு நீர்- குளிர்காலத்தில் ஏற்படும் பெரும்பாலான தொற்றுநோய்களைத் தடுப்பதற்கு சிறிதளவு சூடு நீரில் உப்பை கலந்து வாய் கொப்பளித்தல் மற்றும் காகுள் செய்தலை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

தேநீர்- துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு, திப்பிலி, தேயிலை போன்றவற்றைச் சேர்ந்து தேநீர் அருந்தினால் தொண்டைக்கு இதமாக இருக்கும். நோய் நிவாரணியாகவும் இருக்கும்.

கடுகு- கடுயைமான தொண்டை வலியை உணரும்போது கடுகை பொடித்து தூளாக்கி தொண்டை மீது தடவலாம். தொண்டை வலியை இது கணிசமாக குறைத்துவிடும்.

More News

'சாணிக்காகிதம்' படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த 'சாணிக்காகிதம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்

சொர்க்கத்தில் ராஜ்குமாருடன் புனித்: ஒரு ரசிகரின் அழகிய கற்பனை வரைபடம்!

சாலை விபத்தில் காலமான புனித் ராஜ்குமார் தனது தந்தையை சொர்க்கத்தில் சந்திப்பது போன்ற கற்பனையுடன் ரசிகர் ஒருவர் படம் வரைந்து இணையதளங்களில் வைரலாக்கி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இந்த இருவரில் ஒருவரா?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே

குட்டிப்பாப்பாவின் பிறந்தநாளை தீபாவளியுடன் கொண்டாடிய சதீஷ்: வைரல் புகைப்படங்கள்!

பிரபல காமெடி நடிகர் சதீஷ் தனது குட்டிப் பாப்பாவின் பிறந்த நாளை தீபாவளியுடன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன 

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை… வாழ்த்தும் ரசிகர்கள்!

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசாவை நடிகை திரிஷா பெற்றள்ளார்