மீண்டும் இணையும் 'ஆண்டவன் கட்டளை' ஜோடி

  • IndiaGlitz, [Tuesday,October 25 2016]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ரித்திகாசிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஆண்டவன் கட்டளை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த வெற்றி ஜோடி மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு படம் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம். இந்த படத்தில்தான் மீண்டும் விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணைந்து ரித்திகாசிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

'தானா சேர்ந்த கூட்டம்' ரீமேக் படமா? தயாரிப்பாளர் விளக்கம்

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நாயகி கீர்த்திசுரேஷ் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பில் வரும் நவம்பரில் சூர்யா இணைந்து கொள்வார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அஜித், விஜய், சிவகார்த்திகேயன், திருமணம் குறித்து த்ரிஷா

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் முன்னணி நாயகியாக விளங்கி வரும் நடிகை த்ரிஷா...

தனுஷின் 'பவர்பாண்டி' படத்தில் இணைந்த பிரபல நடிகை

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் ஜொலித்து வந்த தனுஷ் தற்போது இயக்குனர் துறையிலும் காலடி எடுத்து வைத்து இயக்கி கொண்டிருக்கும் படம் 'பவர் பாண்டி'...

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் குஷ்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்...

மாஸ் நடிகரின் படங்களுக்கு இணையாக வெளியாகும் 'காஷ்மோரா'

முதன்முதலாக கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்த படம், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா...