close
Choose your channels

லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Wednesday, June 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குணசித்திர நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் ஏற்கனவே 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே', 'அம்மணி' ஆகிய படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது அவர் இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் 'ஹவுஸ் ஓனர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

உங்கள் அனைவரின் சிறந்த வாழ்த்துக்களையும் பெற்று கொண்டு 'ஹவுஸ் ஓனர்' ஜூன் 28 அன்று வெளிவரவுள்ளது.

சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடந்த உண்மையான சம்பவம் மற்றும் உண்மையான மனிதர்களின் தாக்கத்தில் உருவான கதை 'ஹவுஸ் ஓனர்.

நடிகர்களும் குழுவினரும் குறைவான ஊதியம் மற்றும் வசதிகளுக்கு ஒப்புக்கொண்டனர். இதனால் அனைத்து நிதியும் தரமான படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டது. 50 லட்சம் செலவில் செட் அமைக்கப்பட்டது. இந்த படம் அட்மாஸ்-ல் மிக்ஸ் செய்யபப்ட்டுள்ளது.

மெதுவாக வளரும் ஒரு த்ரில்லர் திரைப்படம் என்றும் சொல்லலாம். வித்தியாசமான வாழ்க்கை மற்றும் தனித்துவமான 'பாலக்காடு' தமிழ் உச்சரிப்பும் நீங்கள் காண்பீர்கள்' என்று லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment