close
Choose your channels

ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்.டி.ஆரின் 'வார் 2' படத்தில் இணைந்த ஷங்கர் பட நாயகி..!

Saturday, June 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் ‘வார் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஷங்கர் படத்தின் நாயகி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஹிருத்திக் ரோஷன் நடித்த ’வார்’ என்ற திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் 170 கோடி பட்ஜெட்டில் உருவாகிய நிலையில் 475 கோடி வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் ‘வார் 2’ படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் இன்னொரு முக்கிய வேடத்தில் ஜான் ஆபிரகாம் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

’பிரம்மாஸ்ரா’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment