close
Choose your channels

விஷால் - ஹரி படத்தின் இசையமைப்பாளர் இவரா? செம விருந்து காத்திருக்கு..!

Saturday, June 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’விஷால் 34’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக வெளியான தகவலை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளர் குறித்த தகவல் கசிந்து உள்ளது. ‘தாமிரபரணி’ ’பூஜை’ ஆகிய படங்களுக்கு அடுத்து மீண்டும் விஷால் மற்றும் ஹரி இணைந்துள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்தில் ஒரு இசை விருந்து காத்திருக்கிறது என்று கூறலாம். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் உருவான ‘ஆறு’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘வேங்கை’, ‘சாமி 2’ உள்ளிட்ட படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஒரு அதிரடி ஆக்சன் படத்தை இந்த படத்தில் இந்த படத்தில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment