close
Choose your channels

இதுபோல என்கிட்ட 100 கதை இருக்குது.. 'விடுதலை' படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி..!

Saturday, April 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இது போன்ற கதை என்னிடம் 100 இருக்கிறது என சமீபத்தில் வெளியான ’பகாசூரன் என்ற திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

‘இந்த படத்தை பார்த்த பின் இரண்டு மூன்று நாட்கள் ஆவது ’விடுதலை’ படத்தின் தாக்கம் நமக்குள் இருக்கும். இது மாதிரி படம் எடுக்க வேண்டும் என்ற சிந்தனை வெற்றிமாறன் அவர்களுக்கு எப்படி தோன்றியது என்று எனக்கு தெரியவில்லை.

இந்த படம் செய்யலாமா? வேண்டாமா? என்ற தயக்கம் எல்லோருக்கும் இருக்கும். ஏனெனில் இந்த படத்தை பார்க்கும்போது பர்சனல் ஆக ஒவ்வொருவரும் கனெக்ட் செய்து கொள்வார்கள். ’விடுதலை’ திரைப்படத்தின் வாத்தியார் பெருமாள் கதாபாத்திரத்தின் ஆழம் எனக்கு நன்றாக தெரியும். ஏனெனில் நான் நிஜ பெருமாளுடன் தொடர்பில் இருக்கிறேன்.

’திரெளபதி’ படத்தில் இதுபோன்ற சில தலைவர்களின் பெயரை சொன்னதற்கு அதை எல்லாம் சொல்லக்கூடாது என கட் செய்துவிட்டார்கள். ஆனால் வெற்றிமாறனால் தான் இது போன்ற படத்தை கொடுக்க முடியும். இந்த கதையை எங்கு தொட்டாலும் பிரச்சனை வெடிக்கும் அளவிலான சிக்கலான கதை. கொஞ்சம் பிசிர் தட்டினால் கூட இவரை காட்டினார்கள், அவரை காட்டினார்கள் என்று சொல்லிவிடுவார்கள். இயக்குனர்கள் இது மாதிரி தைரியம் இருக்க வேண்டும். அது வெற்றிமாறன் சார் அவர்களுக்கு நிறைய இருக்கிறது.

இது மாதிரி கதை என்னிடம் 100 இருக்கின்றன, ஆனால் அதை எல்லாம் படமாக்க பட்ஜெட் வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.