close
Choose your channels

'வாரணம் ஆயிரம்' சூர்யா போல் மீண்டு வந்த விஷ்ணுவிஷால்: ஒரு உருக்கமான பதிவு

Saturday, January 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்த நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 2018 ஆம் ஆண்டு ’ராட்சசன்’ மற்றும் ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார்.

ஆனால் அதன்பின் அவரது உடல்நிலை மற்றும் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டது. மனைவி மகனை பிரிந்தது மற்றும் விபத்தினால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு ஆகியவைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த அவர், சுய கட்டுப்பாட்டையும் இழந்ததாகவும் அதன் பின்னர்  விடாமுயற்சியால் மீண்டு வந்தது குறித்தும் தனது சமூக வலைப்பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏராளமான அனுபவங்களை பெற்றேன். என் மனைவி, மகனை பிரிந்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. இதனால் மது பழக்கத்திற்கு அடிமையானேன். கூடவே நிதி நெருக்கடியும் சேர்ந்தது.

இதனால் நாளுக்கு நாள் மது பழக்கம் அதிகரித்தது. சரியாக தூங்காததால் ஒரு கட்டத்தில் உடல் நலனும் கடுமையாக பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பு ஒன்றில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சையும் செய்து கொள்ள நேர்ந்தது. தொடர்ந்து மோசமான அனுபவங்களையே பெற்று கொண்டிருந்தேன். இதனால் என் குடும்பம் குறிப்பாக என் அப்பா கடுமையாக பாதிக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் எனது வாழ்க்கையை மீட்டு எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். இதனை அடுத்து மன அழுத்தத்தில் இருந்து மீள சிகிச்சை எடுத்தேன். தொடர்ந்து யோகா செய்தேன். மனதை ஒருநிலைப்படுத்தி, என்னை சுற்றி நேர்மறையாக சிந்திக்கும் நபர்களை மட்டுமே வைத்து கொண்டேன். ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு மாறினேன். அளவுக்கு அதிகமான மதுபழக்கத்திலிருந்து சிறிது சிறிதாக என்னை விடுவித்து கொண்டேன்.

முறையான ட்ரைனரை வைத்து சீரான உடற்பயிற்சியில் ஈடுபட்டேன்.  இதனால் சுமார் 16 கிலோ எடை குறைந்து, கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற்றேன். ரசிகர்களுக்கு நான் சொல்லி கொள்வது, எந்த மோசமான நிலையில் இருந்தும் துள்ளி எழுந்து மீள முடியும். சுயஒழுக்கம் மற்றும் நேர்மறையாக தொடர்ந்து சிந்திப்பது உள்ளிட்டவற்றை கடைபிடியுங்கள்.

எதிர்காலம் எனக்கு எதை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், நான் எப்போதும் என் உடலையும் மனதையும் இணைத்து இறுக்கமாக வைத்திருக்க போகிறேன்’ இவ்வாறு நடிகர் விஷ்ணுவிஷால் கூறியுள்ளார்.

கெளதம் மேனன் இயக்கிய ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சூர்யா காதல் தோல்வியால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, உடல் நலம் பாதிக்கப்பட்டு அதன்பின் விடா முயற்சியால் மீண்டு வந்தது போல் விஷ்ணுவிஷாலும் மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.