இதுதான் அமைதியான போராட்டமா? ரஜினி சொன்னதுதான் சரி! பிரபல நடிகர் 

  • IndiaGlitz, [Friday,December 20 2019]

மத்திய அரசு அறிமுகம் செய்த குடியுரிமை சீர்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் இந்த போராட்டம் வன்முறையாக மாறி உள்ளதை அடுத்து இந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இது குறித்துதனது கவலையை தெரிவித்து இருந்தார்.

ஜனநாயக முறைப்படி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் வன்முறை எதற்கும் தீர்வு ஆகாது என்றும் அவர் கூறியிருந்தார். ரஜினிகாந்த் கூறிய இந்த கருத்தை ஒரு சில அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் நடிகர் ரோபோ சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு போலீஸ்காரரை நூற்றுக்கணக்கானோர் சுற்றி கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் உள்ளது. இதுகுறித்து கூறிய ரோபோ சங்கர் ’இதுதான் அமைதியான போராட்டமா? இந்த மாதிரி போராட்டத்தை தான் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் எதிர்த்துள்ளார். சீப்பான அரசியல் செய்து ரத்தம் சிந்த வைக்க வேண்டாம்’ என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ரோபோசங்கரின் இந்த டுவிட்டுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

More News

பிரபல கிரிக்கெட் வீரரிடம் பாராட்டை பெற்ற சூரி மகன்!

திரையுலகினர்களின் வாரிசுகள் பெரும்பாலும் திரையுலகில் நுழைந்து வந்தாலும், ஒரு சில வாரிசுகள் விளையாட்டுத் துறையிலும் ஜொலித்து வருகின்றனர் என்பது குறித்த செய்தியை

'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த 'நேர் கொண்ட பார்வை' நடிகர்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வருவது தெரிந்ததே.

'சொல்லிட்டேன், என் உயிர் தளபதிக்கு ஆக்சன் சொல்லிட்டேன்: ஒரு பிரபலத்தின் டுவிட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில்

அவரை தூக்கிலிடுங்கள்.. முன்னரே இறந்தால் உடலை கட்டித்தொங்கவிடுங்கள்..! பாக். நீதிமன்றம்.

துபாயில் சிகிச்சை பெற்று வரும் முஷாரப் தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பாகப் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பெண் கண்டக்டர் மீது ஆசிட் வீச்சு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் யார்?

பெங்களூரு அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் பெண் மீது 2 மர்ம நபர்கள் திடீரென ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடிவிட்ட சம்பவம் பெங்களூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது