close
Choose your channels

பிரபல கிரிக்கெட் வீரரிடம் பாராட்டை பெற்ற சூரி மகன்!

Friday, December 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலகினர்களின் வாரிசுகள் பெரும்பாலும் திரையுலகில் நுழைந்து வந்தாலும், ஒரு சில வாரிசுகள் விளையாட்டுத் துறையிலும் ஜொலித்து வருகின்றனர் என்பது குறித்த செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம். உதாரணமாக நடிகர் விஜய்யின் மகள், நடிகர் மாதவனின் மகன் உள்ளிடோர் விளையாட்டுத் துறையில் சாதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காமெடி நடிகர் சூரியின் மகன் சஞ்சய், கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு உள்ளார். சமீபத்தில் நடந்த 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் அசத்தலாக விளையாடி அனைவரின் பாராட்டை பெற்றார் சஞ்சய். இந்த போட்டியை நேரில் காண வந்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன் சூரி மகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

தனது மகன் சஞ்சய், அஸ்வினுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சூரி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். சூரியின் மகன் வருங்காலத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரராக உருவாக அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.