கமல், விஜய், அஜீத் நாங்க எல்லோரும் ஒரே குடும்பம். சிம்பு

  • IndiaGlitz, [Wednesday,August 19 2015]

சிம்பு நடித்த வாலு' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு கேள்விகளுக்கு சிம்பு பதிலளித்தார். அப்போது அஜீத் ரசிகரான உங்களுக்கு விஜய் உதவி செய்தது குறித்து கேட்டப்போது, "'வாலு பிரச்சனைக்காக நான் யாரிடமும் உதவி கேட்கவில்லை. ஆனால் விஜய் தானாகவே முன்வந்து 'வாலு' பட ரிலீஸுக்கு உதவி செய்தார். அதே நேரத்தில் சிம்பு எந்த பிரச்சனையும் பார்த்துப்பான் என்று அஜீத் நம்பிக்கை தெரிவித்தார். விஜய், அஜீத், கமல் என நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பம். யாருக்காவது பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் எல்லோருமே முன்னாடி வந்து நிற்போம்' என்று கூறினார்.

மேலும் நடிகர் சங்க தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு பதிலளித்த சிம்பு, "சரத்குமார் நடிகர் சங்கத்திற்கு நிறைய உழைத்துள்ளார். எனது ஆதரவு எப்போதுமே அவருக்கு உண்டு. ஆனாலும் விஷால், விஷ்ணு, கார்த்தி ஆகியோர்களும் எனது நண்பர்கள்தான். அணிகள் என்று இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார்.

மேலும் ரஜினியின் சந்திப்பு குறித்து சிம்பு கூறியபோது மூன்று வருட இடைவெளிக்கு பின் வாலு' படம் வந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இந்த வரவேற்பை அப்படியே தக்க வைத்து கொள் என ரஜினி அறிவுரை கூறியதாகவும், அவருடனான சந்திப்பு தனக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்ததாகவும் சிம்பு கூறியுள்ளார்.

More News

விஜய் தவறவிட்ட வாய்ப்பை கைப்பற்றிய கமல்?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் "தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக...

ஹரிகுமாரின் இரட்டை வேடம் படம் 'மதுரை மணிக்குறவன்

தூத்துக்குடி மற்றும் மதுரை சம்பவம்' ஆகிய படங்களில் நடித்த ஹரிகுமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'மதுரை மணிக்குறவன்'...

கபாலி டைட்டில் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்போம். தாணு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் டைட்டில் 'கபாலி' என இயக்குனர் ரஞ்சித் அறிவித்த சில மணி நேரங்களில் இதே பெயரில் ஒரு படம் ஏற்கனவே தயாராகி வருவதாகவும்,...

'விஜய் 59' படத்தின் டைட்டில்?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் ரிலீஸை அவரது ரசிகர்கள் உள்பட அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்...

நயன்தாரா திருமணத்தை நானே நடத்தி வைப்பேன். சிம்பு அதிரடி பதில்

பலவிதமான தடைகளை கடந்த வெள்ளியன்று வெளியாகி வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் சிம்புவின் 'வாலு' சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்பு, இயக்குனர் விஜய் சந்தர் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.