close
Choose your channels

விஜய் தவறவிட்ட வாய்ப்பை கைப்பற்றிய கமல்?

Wednesday, August 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் "தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். வரும் தீபாவளி திருநாளில் இந்த படம் வெளியாக அனைத்து முயற்சிகளும் படக்குழுவினர்களால் எடுக்கப்பட்டு வருகிறது.


தூங்காவனம்" திரைப்படம் "டோமர் சிஸ்லே" (Tomer Sisley) நடித்திருந்த பிரெஞ்ச் திரைப்படமான 'ஸ்லீப்லெஸ் நைட்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதை ஏற்கனவே நாம் அறிவித்திருந்தோம். இதே நடிகர் நடித்து கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த 'லார்கோ வின்ச்" என்ற திரைப்படத்தின் ரீமேக்கை கடந்த சில வருடங்களுக்கு முன் கவுதம் மேனன், இளையதளபதி விஜய்யை வைத்து 'யோஹன் அத்தியாயம் ஒன்று" என்ற தலைப்பில் இயக்க முடிவு செய்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பாராத சில காரணங்களால் தொடர முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விஜய்-கவுதம் மேனன் கூட்டணி தவறவிட்ட வாய்ப்பை தற்போது கமல்ஹாசன் படக்குழுவினர் நிறைவேற்றி உள்ளனர். கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ராஜேஷ் எம்.செல்வா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.