close
Choose your channels

பிப்ரவரியில் 'வலிமை' உள்பட 6 படங்கள் ரிலீஸ்: ஒரு பார்வை!

Wednesday, February 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. எனவே அஜித்தின் ‘வலிமை’ உள்பட பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த மாதத்தில் மட்டும் 6 திரைப்படங்கள் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் ரிலீசாக உள்ளன

வீரமே வாகை சூடும் - பிப்ரவரி 4: து.பா சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹையாதி, யோகி பாபு உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படம் ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடைசி விவசாயி- பிப்ரவரி 11: ’காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். விவசாயி ஒருவரின் தத்ரூபமான வாழ்க்கையைக் கூறும் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எப்ஐஆர் - பிப்ரவரி - 11: மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் மற்றும் திரில்லர் படம். அஸ்வத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் தீவிரவாதத்தை அடக்கும் அதிகாரி ஒருவரின் கதை என்று கூறப்படுகிறது

வலிமை - பிப்ரவரி 24: இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகிறது. அஜித், ஹூமா குரோஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். ஹாலிவுட் படத்திற்கு இணையாக மோட்டார் பைக் சேஸிங் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த படம் அஜித் படங்களிலேயே மிகப்பெரிய வெற்றி வசூலைக் குவிக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அஜித்தின் படம் முதல்முறையாக இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்திய திரைப்படமாக ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேற்கண்ட நான்கு திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள நிலையில் ஓடிடியில் விக்ரமின் ’மஹான்’ மற்றும் ’பன்றிக்கு நன்றி சொல்ல வா’ ஆகிய 2 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ’மஹான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ரிலீசாக உள்ளது. சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் பாலா சரண் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பன்றிக்கு நன்றி சொல்ல வா’ என்ற திரைப்படம் சோனிலைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதும், காமெடி கதையம்சம் கொண்டது என்பதும் இந்த படத்திற்கும் ஓரளவு எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.