close
Choose your channels

அசோக்செல்வன் படம் உள்பட 3 தமிழ்ப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

Thursday, February 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் அசோக் செல்வன் திரைப்படம் உள்பட 3 தமிழ் படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அசோக் செல்வன் நடிப்பில் கார்த்திகேயன் என்பவரின் இயக்கத்தில் உருவான ’சபாநாயகன்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் இந்த வாரம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் உருவான ’ரூட் நம்பர் 17’ என்ற திரைப்படம் கடந்த டிசம்பரில் வெளியான நிலையில் இந்த படமும் இந்த வாரம் இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஆஹா ஓடிடியில் ’வேற மாதிரி லவ் ஸ்டோரி’ என்ற தமிழ் படம் வெளியாக உள்ளது. இந்த மூன்று தமிழ் படங்களை அடுத்து சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக ’தி கேரளா ஸ்டோரி’ என்ற படம் ஜீ5 ஓடிடியில், ‘பாமகலாபம்’ என்ற தெலுங்கு படம் ஆஹா ஓடிடியில், ’குயின் எலிசபெத்’ என்ற மலையாள படம் ஜீ5 ஓடிடியில், 'நா சாமி ரங்கா’ என்ற தெலுங்கு படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment