close
Choose your channels

'பொன்னியின் செல்வன் 2' சிறப்பு காட்சி: IndiaGlitz-க்கு நன்றி தெரிவித்த பிரபலங்கள்..!

Saturday, April 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் உலகம் முழுவதும் முதல் நாளில் இந்த படம் ரூ.65 கோடி வசூல் செய்துள்ள நிலையில் முதல் பாகத்தின் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன் 2’ படத்தை முதல் நாளே பல திரை உலக பிரபலங்கள் பார்த்தார்கள் என்பதும் குறிப்பாக இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் பார்த்த புகைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாடு மட்டும் என்று இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’பொன்னியின் செல்வன் 2’ படத்தை IndiaGlitz சார்பாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சியில் அருவி கதாநாயகி அதிதி பாலன் ,சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் அசார், பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ,சின்னத்திரை நடிகை ரேஷ்மா, நடிகை மீரா கிருஷ்ணன். பிரபல youtube பிரபலங்கள் சித்து, ஷெரிப், நடிகை அபிராமி ,கைதி படத்தின் குழந்தை நட்சத்திரம் உள்பட பலர் வருகை தந்து படத்தை பார்த்து ரசித்தனர்

மேலும் படம் முடிந்த பிறகு படம் பார்த்த அனுபவத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்டதோடு, சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்த IndiaGlitz-க்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment