close
Choose your channels

21  வருட கனவு நனவானது: ரஜினியை சந்தித்த இளம் கிரிக்கெட் வீரரின் மகிழ்ச்சியான பதிவு..!

Monday, March 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது எனது 21 வருட கனவு என்றும் அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது என்றும் இளம் கிரிக்கெட் வீரர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களின் ஒருவர் சஞ்சு சாம்சன் என்பதும் ராஜஸ்தான் ராயல் அணியில் தற்போது விளையாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சஞ்சய் சாம்சன் 7 வயது சிறுவனாக இருக்கும் போது ரஜினியின் ரசிகராக மாறியதாகவும் தனது பெற்றோரிடம் என்றாவது ஒருநாள் நான் ரஜினி அவர்களை அவருடைய வீட்டிலேயே சந்திப்பேன் என்று கூறியதாகவும் தற்போது 21 வருடங்களுக்கு பின்னர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னை வீட்டிற்கு அழைத்ததாகவும் அவரை நேரில் சந்தித்ததாகவும் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியை சந்தித்தது குறித்து அவர் மேலும் கூறுகையில் 21 வருட கனவு நனவாகியுள்ளது என்று கூறி ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வரும் 31ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில் அதில் வழக்கம் போல் இந்த ஆண்டும் ரன்களை குவிக்கும் மிஷின் ஆக சஞ்சு சாம்சன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment