close
Choose your channels

லெஜண்ட் சரவணனின் வேற லெவல் கெட்டப்: அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டாரா?

Monday, March 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜென்ட் சரவணன் வேற லெவல் கெட்டப் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்

லெஜண்ட் சரவணன் நடித்து தயாரித்த ‘லெஜண்ட்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஆனால் அதே நேரத்தில் சமீபத்தில் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான போது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் கோலிவுட் திரை உலகினர்களுக்கு இது பெரும் ஆச்சரியத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விரைவில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் பிரபல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் லெஜண்ட் சரவணன் வேற லெவல் கெட்டப்பில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

20 வயது இளைஞர் போல் அசத்தலாக இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லெஜண்ட் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டதாக கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.