close
Choose your channels

'தளபதி 66' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது உண்மையா?

Wednesday, October 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்க இருக்கும் 66வது திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பின்படி இந்த படத்தை வம்சி இயக்க இருப்பதாகவும், தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களுக்கு பின்னர் மீண்டும் அவர் விஜய்யுடன் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் வட்டாரத்தில் விசாரித்தபோது கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பது தெரியவந்து உள்ளது. ஆனால் அதே நேரத்தில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் இந்த படத்தில் நடிப்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் ’தளபதி 66’ திரைப்படத்தில் இசையமைக்க இருப்பது தமன் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் ’பீஸ்ட்’ படத்தின் ரிலீஸுக்கு முன்னரே ’தளபதி 66’ படத்தின் பெரும்பாலான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.