close
Choose your channels

'ரெட்' படத்தின் 2வது பாகமா 'தல 56'?

Friday, September 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அஜீத் டாக்சி டிரைவர் வேடத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகளில் அஜீத் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் வருவதாகவும், அந்த கெட்டப் அஜீத் ஏற்கனவே நடித்த 'ரெட்' படத்தின் கெட்டப் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் ரஜினியின் 'பாட்ஷா' படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில்ம் இந்த படம் 'ரெட்' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் அஜீத் இந்த படத்தில் இரண்டு கெட்டப்பில் தோன்றுவதை மட்டுமே உறுதி செய்துள்ளனர்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், ராகுல்தேவ், சூரி மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். ஏ.எம்.ரத்னம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.