close
Choose your channels

ஜெய்-அஞ்சலி படத்தின் டைட்டில் அறிவிப்பு

Sunday, July 10, 2016 • தமிழ் Comments

நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி ஐந்து வருடங்களுக்கு பின்னர் இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது என்றும் ஜெய், அஞ்சலி இருவருமே தங்கள் சமூக வலைத்தளங்களில் இதை உறுதிப்படுத்தியிருந்தனர் என்பதையும் சற்று முன்னர் பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
 
திகில் மற்றும் சஸ்பென்ஸ் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு 'பலூன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் சற்று முன்னர் முதல் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
அறிமுக இயக்குனர் சினேஷ் இயக்கும் இந்த படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவும், திலிப் சுப்பராயன் சண்டைப்பயிற்சியும் ஷக்தி வெங்கட்ராஜ் கலை இயக்குனராகவும் ரூபன் எடிட்டராகவும் பணிபுரிகின்றனர். இந்த படம் ஜெய்யின் 20வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.