close
Choose your channels

தொடங்கியது 'ஜெயிலர்' படப்பிடிப்பு: ரஜினி கலந்து கொள்வது எப்போது?

Wednesday, August 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்கட்ட படப்பிடிப்பில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ரெடின்கிங்ஸ்லி ஆகியோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 15 முதல் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்ட தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிப்பதாக கூறப்படும் ஐஸ்வர்யாராய், அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அதேபோல் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.