பிக்பாஸ் தமிழ் நடிகை பாடிய முதல் பாடல்: இணையத்தில் வைரல்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் நடிகையுமான ஜனனி ஐயர் பாடிய முதல் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘உன் நெருக்கம்’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி கம்போஸ் செய்ய இந்த பாடலை அவருடன் நடிகை ஜனனி ஐயரும் பாடியுள்ளார். இந்த பாடலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஜனனி ஐயர், ’என்னுடைய முதல் பாடும் அனுபவம். முதல்முறையாக என்னால் முடிந்தளவு முயற்சி செய்து பாடியுள்ளேன். இந்த பாடலை பாட எனக்கு ஊக்கம் அளித்த அஸ்வினுக்கு நன்றி. இந்த பாடல் ஸ்கைப் மூலம் ரிக்கார்டிங் செய்யப்பட்டது. இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என்ரு கூறியுள்ளார்.

உண்மையில் ஒரு தேர்ந்த பாடகி போல் ஜனனி ஐயர் பாடியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுக்கு குவிந்து வருகிறது. மேலும் தொடர்ந்து திரைப்படங்களுக்கும் பாட முயற்சி செய்யுங்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஜனனி ஐயரின் இந்த பாடல் எப்படி உள்ளது என்பதை நீங்கள் கேட்டு உங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்

More News

புது வரவு ஹுண்டாய் வெர்னா!!! எப்படியிருக்கும்???

டீசல் கார்களில் முன்னிலையில் இருக்கும் ஹோண்டாய் நிறுவனம் தற்போது தனது வரவை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

கொரோனா: சுவீடன் இன்றுவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவில்லை!!! காரணம் என்ன???

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கைப் பிறப்பித்து கடும் பொருளாதார மந்தத்தைச் சந்தித்து வருகின்றன

சென்னையில் அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி!

சென்னையில் அனைத்து தனிக்கடைகளும் செயல்பட அனுமதி என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நிபந்தனைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

ஒரே தெருவில் நேற்று 19, இன்று 40: சென்னையில் கோரத்தாண்டவமாடும் கொரோனா

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியின் ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஒரு தகவல் உறுதி செய்த நிலையில் இன்று அதே தெருவில் 40 பேர் கொரோனாவால்

ராகவா லாரன்ஸ் உதவியால் கொரோனா பாதித்த பெண்ணுக்கு நடந்த பிரசவம்

ராகவா லாரன்ஸ் ஏற்கனவே கொரோனா தடுப்பு நிதியாக ரூபாய் 4 கோடிக்கு மேல் கொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி அரிசிகள் உள்பட ஏராளமான பொருட்களையும் ஏழை எளிய மக்களுக்கு அவர் வழங்கி வருகிறார்