close
Choose your channels

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தில் இணையும் 'ஜெய ஜெய ஜெய ஜெயஹே' நாயகி..!

Tuesday, February 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த படம் தென் மாவட்டச் சேர்ந்த கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் என்றும் இந்த படத்தில் நடிப்பதற்காக கடந்த சில மாதங்களாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ’‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’ என்ற படத்தில் நாயகியாக நடித்த தர்ஷனா ராஜேந்திரன் என்பவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இவர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 15ஆம் தேதி தூத்துக்குடியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் 70 முதல் 80 நாட்களில் இந்த படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos