close
Choose your channels

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

Monday, May 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனவத் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப்தொடராக எம்எக்ஸ் பிளேயர் என்ற ஓடிடி தளத்தில் வெளியானது. கௌதம் மேனன் மற்றும் பிரசாந்த் முருகேசன் இணைந்து இயக்கிய இந்த தொடரில் ஜெயலலிதாவின் கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். தர்புகா சிவா இசையமைப்பில் உருவான இந்த தொடர் கடந்த 2019ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’குயின்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த தொடரின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய கவுதம் மேனன் மற்றும் பிரசாந்த் முருகேசன் இயக்கும் இந்த தொடரிலும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பதை அவர் தனது இன்ஸ்டாகிராமில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த தொடரில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos