close
Choose your channels

ஆகஸ்ட் 28, செப்.10: அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் ஜெயம் ரவி..!

Friday, August 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி ஏற்கனவே 4 திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான ’தனி ஒருவன்’ திரைப்படத்தின் அறிவிப்பு வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஒன்றின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

நடிகர் ஜெயம் ரவி தற்போது நயன்தாராவுடன் இறைவன், கீர்த்தி சுரேஷ் உடன் ‘சைரன்’, கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி , வாமிகா கபி ஆகிய 3 நடிகைகள் நாயகிகளாக நடிக்கும் ‘ஜெனி’ மற்றும் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயம் ரவி - ராஜேஷ் எம் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி ஜெயம் ரவியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் பூமிகா, ஜெயம் ரவியின் சகோதரி கேரக்டரில் நடித்துள்ளார். அக்கா தம்பி பாசத்தின் கதை அம்சம் கொண்ட இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

எனவே ஜெயம் ரவியின் ’தனி ஒருவன் 2’ அறிவிப்பு ஆகஸ்ட் 28ஆம் தேதியும், செப்டம்பர் 10ஆம் தேதி ’ஜெயம் ரவி 30’ படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டரும் அடுத்தடுத்து வெளியாக உள்ளதை அடுத்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment