close
Choose your channels

அதுக்குள்ளவா..? ஜெயம் ரவியின் 'அகிலன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Friday, March 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் அதற்குள் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘அகிலன்’. இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ரிலீசுக்கு பின்னர் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் ‘அகிலன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் மட்டுமே ஆகி உள்ள நிலையில் தற்போது இந்த படம் ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய ஒரு மாதம் கழித்தே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்கள் நிபந்தனை விதித்துள்ள நிலையில் 21 நாட்களில் ‘அகிலன்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத ‘அகிலன்’ ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.