ஜீவாவின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நாயகி.. இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,December 15 2022]

நடிகர் ஜீவா நடித்த ’காபி வித் காதல்’ மற்றும் ’வரலாறு முக்கியம்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் ஜீவா நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனர் மணிகண்டன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படம் ஒரு கமர்ஷியல் கதையம்சம் கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவா ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’கருப்பன்’ உதயநிதி ஸ்டாலின் நடித்த ’நெஞ்சுக்கு நீதி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கின்றார். சித்தார்த் எடிட்டராகவும் மெட்ரோ மகேஷ் ஸ்டண்ட் இயக்குனராகவும் இந்த படத்தில் பணிபுரிய உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற உள்ளது.


 

More News

'நான் சாகக்கூடாதுன்னு விதி என்னை விட்டுவச்சுருக்கு.. சுந்தர் சியின் 'தலைநகரம் 2' டீசர்

சுந்தர் சி நடித்த 'தலைநகரம்' என்ற திரைப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான நிலையில் 16 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அஜித்தின் 'துணிவு' திரைப்படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவா?

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வைரலாகும் பிக்பாஸ் ஆயிஷாவின் குடும்ப புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் உள்ள ஒருவர் வெளியேறி கொண்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

100 இடங்களில் தொடங்கப்பட்ட 'வாரிசு' முன்பதிவு: ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

காட்சிகளை மாற்றாவிட்டால் ரிலீஸ் செய்ய விடமாட்டோம்: தீபிகா படுகோனுக்கு உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!

பிரபல நடிகை நடித்த திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடலில் சர்ச்சிக்குரிய வகையில் அவர் உடை அணிந்து இருந்ததை அடுத்து மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் கடும்