close
Choose your channels

100 இடங்களில் தொடங்கப்பட்ட 'வாரிசு' முன்பதிவு: ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

Wednesday, December 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் சென்னை மெட்ரோ ரயில்களில் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் அஜித்தின் ’துணிவு’ படத்துடன் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதால் திரையரங்குகள் புக் செய்யும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் பிற நாடுகளிலும் ‘வாரிசு’ படத்திற்கான பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள சில பகுதிகளில் ‘வாரிசு’ படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டதாக இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ள அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பிரிட்டனில் 100 பகுதிகளில் ‘வாரிசு’ படத்தின் முன்பதிவு தொடங்கி விட்டதாகவும் ரசிகர்கள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்து வருவதாகவும் அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பே முன்பதிவை தொடங்கியுள்ள நிலையில் முன் பதிவிலேயே இந்தப்படம் பெரிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.