close
Choose your channels

ஜோதிகாவின் 'ராட்சசி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Monday, June 24, 2019 • தமிழ் Comments

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த டிரைலரில் ஒரு அரசு பள்ளியின் அவலத்தையும் அந்த அரசுப்பள்ளியை ஒரு பொறுப்புள்ள ஆசிரியை நினைத்தால் தலைகீழாக மாற்றலாம் என்றும் கூறப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் டீசரை பார்த்த அனைவரும் திரையில் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்ற இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில், 'ராட்சசி' திரைப்படம் வரும் ஜூலை 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே இதே தேதியில் விமல்-ஓவியாவின் 'களவாணி 2' மற்றும் ஜீவாவின் 'கொரில்லா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா, ஹரிஷ் பெராடி, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கவுதம் ராஜ் இயக்கியுள்ளார். சீன் ரோல்டான் இசையில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில் பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz