close
Choose your channels

விஜயகாந்துடன் அஜித்தை ஒப்பிட்ட ஜோதிகா! ஏன் தெரியுமா?

Thursday, January 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த உலகமே விளம்பரமயமாகிவிட்ட நிலையில் அரிதிலும் அரிதாக ஒருசிலரே தாங்கள் செய்யும் உதவியை கூட விளம்பரம் செய்யாமல் இருக்கும் குணம் கொண்டவர்களாக உள்ளனர். அதில் ஒருவர் தல அஜித் என்றால் அது மிகையாகாது.

இந்த நிலையில் சென்னை மருத்துவமனை ஒன்றில் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, 'ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் விஜய்காந்த் மற்றும் அஜித் ஆகியோர் மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள். அவர்கள் செய்யும் உதவிகள் பல யாருக்கும் தெரியாது. இருவரும் அதனை விளம்பரம் செய்யவோ குறைந்தபட்சம் அதுகுறித்து பேசுவதையோ விரும்புவதில்லை' என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.