close
Choose your channels

'காத்துவாக்குல' கதீஜாவாக நடிக்க இருந்தவர் இந்த பிரபல நடிகையா?

Wednesday, May 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூன்று பேருக்குமே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக கதீஜா கேரக்டரில் நடித்த சமந்தாவுக்கு ரசிகர்களின் வாழ்த்து மழை தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்பதும், அந்த அளவுக்கு அவர் அந்த கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதலில் கதீஜா கேரக்டருக்கு த்ரிஷாவை நடிக்க வைக்கவே இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அவரது தேதிகள் கிடைக்காததால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததால் அவர் சமந்தாவிடம் இது பற்றி பேசியதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சமந்தாவும் தெலுங்கில் பிசியாக இருந்த நிலையில் நயன்தாரா தான் அவருடன் பேசி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள வைத்ததாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை கதீஜா கேரக்டரில் சமந்தாவுக்கு பதில் த்ரிஷா நடித்து இருந்தால் அந்த படம் எப்படி இருந்து இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos