'எந்திரனை' விட இருமடங்கு. 'கபாலி'யின் அசைக்க முடியாத சாதனை

  • IndiaGlitz, [Tuesday,July 26 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. வார இறுதி நாட்களையும் கடந்து திங்கட்கிழமையும் திரையரங்குகளில் இந்த படத்திற்கு அதிக கூட்டம் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வட அமெரிக்காவில் இந்த படத்தின் வசூல் புதிய சாதனையை செய்துள்ளது. இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பிரிமியர் மற்றும் நான்கு நாட்கள் வசூல் $3,896,444 என்பது தெரிய வந்துள்ளது. இந்த வசூல் இதே நான்கு நாட்கள் 'எந்திரன்' பட வசூலை விட இருமடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருசில இணையதளங்கள் மற்றும் சமூக இணையதள பயனாளிகள் எதிர்மறை விமர்சனங்கள் அளித்து வந்தபோதும் இந்த படத்தின் வசூல் குறையாமல் வெற்றிகரமாக ரூ.300 கோடி இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அஜித் 57' படத்தின் நீளமான ஷூட்டிங் பிளான்

தல அஜித் நடிக்கும் 57 வது படமான 'ஏகே 57' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

'குக்கூ' இயக்குனரின் 'ஜோக்கர்' சென்சார் தகவல்

பிரபல எழுத்தாளர் ராஜூமுருகன் இயக்கிய 'குக்கூ' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்...

உயிர் நண்பருக்காக 'கபாலி' ஸ்பெஷல் காட்சி: ரஜினி திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இளையதளபதி விஜய்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை, மற்றும்...

தமிழில் மேலும் ஒரு 'நம்பர்' படம்

தமிழ் திரையுலகில் ஏற்கனவே 24, 144, 46ஓ உள்பட பல திரைப்படங்கள் நம்பர்களின் டைட்டிலில் வெளிவந்துள்ள நிலையில்...