close
Choose your channels

தமிழில் மேலும் ஒரு 'நம்பர்' படம்

Monday, July 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் ஏற்கனவே 24, 144, 46ஓ உள்பட பல திரைப்படங்கள் நம்பர்களின் டைட்டிலில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நம்பர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டைட்டில் '54321' என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் சமீர் பரத்ராம் சமீபத்தில் வெளியாகி எதிர்பாராத வெற்றியை பெற்ற 'உறியடி' திரைப்படத்தின் இணண தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகுமார் என்பவர் நடித்து, தயாரித்து, இயக்கிய 'உறியடி' என்ற அதிரடி ஆக்சன் படம் ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக சென்னை உள்பட பல நகரங்களில் 25 நாட்கள் ஓடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
'54321' தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ராகவேந்திர பிரசாத் இயக்கி வருகிறார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைப்பில், திலீப் சுப்பராயன் சண்டைப்பயிற்சியில் உருவாகும் இந்த படத்தின் பாடல்களை நா.முத்துகுமார் எழுதவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.