'கடைக்குட்டி சிங்கம்' படத்தால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மைகள்

  • IndiaGlitz, [Monday,July 23 2018]

ஒரு திரைப்படத்தில் ஒரு ஹீரோ புகைப்பிடித்தால் ரசிகர்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவதாக இதுவரை நெகட்டிவ் குற்றச்சாட்டுக்கள் மட்டுமே பெரும்பாலும் திரைப்படங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு திரைப்படத்தால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரிதாகவே செய்தி வருகிறது

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தால் தமிழகத்தில் இரண்டு நல்ல காரியங்கள் நடந்துள்ளது. இந்த படத்தில் வயதான பெண் ஒருவர் தனது விவசாய பொருளை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்த நிலையில் கார்த்தி, ஒரு பேருந்தை நிறுத்தி அவரை பேருந்தில் அவரை ஏற்றிவிடுவார். விவசாயிகளுக்கு பேருந்துகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கண்டக்டரிடம் வசனம் பேசுவார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக லாரி ஸ்டிரைக் காரணமாக தமிழகத்தில் விவசாயிகளின் விளை பொருட்கள் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனையடுத்து விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றி செல்லலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேபோல் விவசாயத்தின் விளைபொருட்களை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் இந்த படத்தில் ஒருசில காட்சிகள் உள்ளது. அதன்படி நெல்லையில் உளள ஒரு திரையரங்கில் தற்போது இளநீர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் சில நாட்களில் நுங்கு உள்பட ஒருசில பொருட்களை திரையரங்கில் விற்பனை செய்யவும் திரையரங்கு நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த புதிய முயற்சிக்கு சினிமா ரசிகர்களின் ஆதரவு பெருகிவருகிறது. இதனை தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவில் வழக்கு: காவல்துறை ஆணையரிடம் புகார் மனு

ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் இந்தியன் மக்கள் மன்றம் என்ற அமைப்பு புகார் அளித்துள்ளது

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரம்யா வெளியேற்றம்: கோலிவுட் பிரமுகர்கள் அதிருப்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாம் ஏற்கனவே கூறியவாறு ரம்யா நேற்று வெளியேற்றப்பட்டார். முதலில் எவிக்சன் பட்டியலிலேயே இல்லாத ரம்யா, தலைவராக

ஒரே நாளில் வெளியாகும் இரண்டு சமந்தா படங்கள்

ஒரு நடிகையின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவருவது என்பது அபூர்வமாக நடக்கும் நிகழ்வு என்ற நிலையில் நடிகை சமந்தாவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டே வாரத்தில் சுமார் ரூ.4 கோடி வசூலை நெருங்கிய 'தமிழ்ப்படம் 2'

ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து பிரமாண்டமான படங்களை எடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் ஒருசில கோடி செலவில் குறைந்த பட்ஜெட்டில் படம் இயக்கி

இரண்டாவது வாரத்திலும் வசூலில் சிங்கமாக இருக்கும் 'கடைக்குட்டி சிங்கம்

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்ட்ராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்துள்ளன