ஒரே வாரத்தில் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கொடுத்த 'கைதி'

  • IndiaGlitz, [Friday,November 01 2019]

கடந்த தீபாவளி தினத்தில் விஜய்யின் பிகில் என்ற பிரம்மாண்டமான படத்துடன் தைரியமாக வெளிவந்த ஒரே படம் கார்த்தியின் கைதி மட்டுமே. இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் குறைவான திரையரங்குகளே கிடைத்த போதிலும் இந்த படத்திற்கு கிடைத்த பாஸிட்டிவ் ரிசல்ட் காரணமாக அடுத்தடுத்து திரையரங்குகளும் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் ரூபாய் 48 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் இந்த படம் 22.43 கோடி வசூல் செய்து உள்ளது என்பதும் சென்னையில் மட்டும் ரூ 1.75 கோடி வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கைதி திரைப்படம் கேரளாவில் 4.2 கோடியும் கர்நாடகாவில் 4.7 கோடியும் ஆந்திராவில் 9.1 கோடியும் வட இந்தியாவில் 1.5 கோடியும் வசூல் செய்துள்ள இந்த படம் வெளிநாடுகளில் 6 கோடி வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ஒரே வாரத்தில் 48 கோடி வசூல் செய்துள்ளது தயாரிப்பு மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

More News

விஜய்யின் 'பிகில்' ஒருவாரத்தில் செய்த வசூல் சாதனை

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான 'பிகில்' திரைப்படம் கடந்த

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு 

கடந்த சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சியில் இளம்பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் மயக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்

ஐடி ரெய்டில் சிக்கிய அஜித்-விஜய் பட நடிகை!

விஜய் நடித்த 'லவ் டுடே' மற்றும் அஜித் நடித்த 'ராஜா' உள்பட பல தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் படங்களில் நடித்தவர் நடிகை மந்த்ரா.

நாளை வருகிறேன், தயாராக இருங்கள்: பிக்பாஸ் தர்ஷன் வீடியோ!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் கடைசி நேரத்தில் திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது

சென்னையை சேர்ந்த நடிகை கடலூரில் கைது

போலீசாரால் கைது செய்யப்பட்ட கணவரை விடுதலை செய்ய போலீஸ் வேடத்தில் சென்று போலீஸ் அதிகாரிகளை மிரட்டியது துணை நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்