நடிகை காஜல் அகர்வால் செய்த மிகப்பெரிய நிதியுதவி

  • IndiaGlitz, [Thursday,April 16 2020]

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்களுக்கு, நலிந்த நடிகர்களுக்கு என பல்வேறு தரப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் தாராளமாக நிதியுதவியை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெரும்பாலும் நடிகர்களே நிதியுதவி செய்து வருவதாகவும் நடிகைகளில் வெகுசிலர் மட்டுமே உதவி செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு ஒன்று இருந்து வருகிறது. இந்த நிலையில் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் ரூ.6 லட்சம் நிதியுதவி குறித்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.

இந்த ரூ.6 லட்சத்தில் ரூ.2 லட்சம் பெப்சி அமைப்பினர்களுக்கும், ரூ.2 லட்சம் தெலுங்கு திரைப்படவுலக கொரோனா டிரஸ்ட்டுக்கும், ரூ.1 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும், ரூ.1 லட்சம் மகாராஷ்டிரா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் அவர் வழங்கியுள்ளார்.

மேலும் மும்பையை சேர்ந்த பல ஏழை எளிய மக்களுக்கு அவர் உணவுகளையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அதுமட்டுமின்றி விலங்குகள் நல அமைப்பான பீட்டா அமைப்பிற்கும் அவர் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா பரபரப்பிலும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: 3 பேர் கைது

உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கொரோனா வைரசால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே கொரோனவுக்கு எதிராக மீம்ஸ்களும், கொண்டாட்டங்களும் நடந்து வருவது

காஜல் அகர்வாலிடம் உதவி கேட்ட 'பீட்டா இந்தியா'

இந்தியாவில் விலங்குகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் 'பீட்டா இந்தியா' என்ற அமைப்பு தற்போதைய கொரோனா ஊரடங்கு நேரத்தில் தெருவில் உணவின்றி நடமாடி வரும் நாய் உள்ளிட்

தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் திறக்கும் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்களுக்காக தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்க வேண்டும் என சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த

உங்களை மாதிரி ரசிகர்கள் கிடைக்க விஜய் கொடுத்து வச்சிருக்கணும்: பிரபல இயக்குனர் பாராட்டு

தமிழகத்துக்கு எப்போதும் இயற்கைப் பேரிடர் வந்தாலும் முதல் நபராக சமூக சேவை செய்து பொதுமக்களுக்கு உதவி செய்வது விஜய் ரசிகர் தான் என்பது அனைவரும் அறிந்ததே

கறிவிருந்து வைத்து கொரோனா திருவிழாவை கொண்டாடிய இளைஞர்: அள்ளிச்சென்ற போலீஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் கொத்துக் கொத்தாக உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கொரோனாவை திருவிழாவாக கொண்டாடி இருப்பது